இந்த அறிகுறிகள் இருக்கும் ஆண்கள் மனைவியை கொலைசெய்ய கூடியவர்களாம்… உஷாரா இருங்க…!

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் வலிமையான அழகான ஒரு உறவாகும். ஆனால் இப்போதோ தினமும் கணவன் மனைவியை கொலை செய்தார், மனைவி கணவனை கொலை செய்தார் என்ற செய்திகள் இல்லாமல் ஒரு நாளும் கடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த கொடுஞ்செயலுக்கு பிறகு எது காரணமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாளுக்கு நாள் திருமணம் சார்ந்த குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் தங்கள் மனைவியை கொன்ற ஆண்கள்தான். ஒவ்வொருவரும் தங்கள் மனைவியைக் கொல்ல பல்வேறு விதமான காரணங்களைக் கூறினர். ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் மனைவியைக் கொன்ற அவர்களுக்கு இடையில் பல குணங்கள் பொதுவாக இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு மனைவியை கொலை செய்யக்கூடிய கணவர்களின் அறிகுறிகள் தயாரிக்கப்பட்டது. அது என்னென்ன அறிகுறிகள் இன்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிற்க்குள் வன்முறை

மனித நடத்தை குறித்து பொதுவாக நேர்மறையான மற்றும் நம்பிக்கையான பார்வையை வைத்திருப்பது நல்லது, ஆனால் சிலரால் தங்களின் நடத்தையை கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆணுக்கு அவர்களின் முந்தைய உறவிலோ அல்லது தற்போதையோ உறவிலோ மனைவியை அடித்து துன்புறுத்திய வரலாறு இருந்தால் அவரது மனைவியின் எதிர்காலம் கேள்விக்குறியில் உள்ளது என்று அர்த்தம். மனைவியை அடிப்பது கொலைக்கான உறுதியான அறிகுறியாக இல்லை என்றாலும் தங்களின் கோபத்தை கட்டுப்படுத்த இயலாதவர் சில சூழ்நிலைகளால் மனைவியை கொல்வதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.

 

ஹோட்டலில் எப்போதும் மனைவிக்கும் சேர்த்து ஆர்டர் செய்வார்கள்

கொலை செய்யக்கூடியவர்கள் எப்போதும் பொறாமை மற்றும் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது ஒரு ஆரம்பகால அறிகுறியாகும், இப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை ஹோட்டல்களில் உணவை ஆர்டர் பண்ண விடமாட்டார்கள். இந்த நடத்தை வழக்கமாக பிற அறிகுறிகளுடன் இருக்கும், அதாவது அவர்கள் எங்கு செல்கிறார்கள் அல்லது அவர்களின் வாழ்க்கையில் வேறு என்ன நடக்கிறது போன்ற தகவல்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்துவது. யாரோ ஒருவர் தங்கள் கூட்டாளருக்காக ஒரு உணவகத்தில் ஆர்டர் செய்வதை நீங்கள் கண்டால், அவ்வாறு செய்வது யாரோ ஒருவர் தங்கள் மனைவியைக் கொலை செய்வதற்கான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும் என்று நீங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை செய்து விடாதீர்கள். ஏனெனில் சிலசமயங்களில் இது அதீத அன்பு மற்றும் புரிதலின் அடையாளமாகவும் இருக்கலாம். பெரும்பாலும் மனைவியை கட்டுப்படுத்தும் கொண்டவர்கள் அவர்களை கொல்வதற்கு வாய்ப்புள்ளது.

 

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருப்பது

கொலை அல்லது வீட்டுக்குள் வன்முறை ஈடுபடுபவர்களின் முக்கியமான அறிகுறி ஆத்திரம், கூச்சலில் ஈடுபடுவது, மனநிலை மாற்றத்தால் வன்முறையில் இறங்குவது போன்றவையாகும். இந்த தீவிர உணர்ச்சிகரமான நடத்தைகளை கட்டுப்படுத்த இயலாமை என்பது ஆழ்ந்த மனநல பிரச்சினைகளின் எச்சரிக்கை அறிகுறியாகும். இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சோகமான விளைவுகளை ஏற்படுத்தும். கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகள் இயல்பாகவே கொலைகாரனின் அடையாளம் அல்ல, ஆனால் ஒரு உணர்ச்சிபூர்வமான நபரின் வன்முறை வெடிப்புகள் தங்கள் மனைவியை ஆத்திரத்தில் கொல்வதற்கு முன் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருக்கலாம்.

 

அதிகளவு மனக்கிளர்ச்சி

அதிகளவு கொடூரமான கொலைகள் பெரும்பாலும் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும், ஒரு கணத்தில் ஏற்படும் மனக்கிளர்ச்சி காரணமாகவே இது நடக்கிறது. திட்டமிடப்பட்ட கொலை அளவிற்கு இதுபோன்ற கொலைகள் கொடூரமாக இல்லையென்றாலும் இதிலும் உயிர் போகத்தான் போகிறது. இந்த வகையான கொலைகளுக்கு மூல காரணம் பெரும்பாலும் மோசமான உந்துதலும், உணர்ச்சி கட்டுப்பாடின்மைதான். ஒரு சாதாரண சோதனைக்கு கணவரை மளிகை சாமான்கள் வாங்க ஒரு பட்டியலைக் கொடுத்து அனுப்பவும். அவர் திரும்பி வரும்போது அவர்கள் பட்டியலில் இல்லாத சில பொருட்களை வாங்கி வந்தால் அவர்கள் கொலை செய்யும் மனநிலை உடையவர்கள்தான்.

 

மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாகுதல்

மது அல்லது பிற போதைப் பொருட்கள் தந்திரமானவை, அவை ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக ஒருவருக்குள் கொலை செய்யும் எண்ணம் ஆழ்மனதில் இருந்தால் கூட அவர்கள் உட்கொள்ளும் போதைப்பொருட்கள் அதனை வெளியே கொண்டுவர இயலும். தொடர்ச்சியான போதை அல்லது மது பழக்கம் ஆரோக்கியத்தையும், நிம்மதியை மட்டும் கெடுக்காமல் சில சமயம் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். மனைவியை கொலை செய்த கணவர்களில் கிட்டதட்ட 63 சதவீதத்தினர் போதைக்கு அடிமையானவர்களாக இருக்கின்றனர்.

ஏமாற்றத் தொடங்குவது

திருமணமான ஆண்களில் பெரும்பாலானோர் தங்கள் மனைவியை ஏமாற்றுகின்றனர். திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மனைவியை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உங்களுக்கு தெரிந்து யாராவது தகாத உறவில் இருந்தால் அவர்களை நன்கு கவனியுங்கள். தகாத உறவில் இருக்கும் ஆண்களுக்கு அந்த உறவுதான் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக எண்ணம் இருக்கும். எனவே தனது மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது யார் என்று சிந்திக்கும் போது அவர்கள் நினைவிற்கு முதலில் வருவது மனைவிதான். எனவே அவர்கள் மனைவியை கொல்ல திட்டமிடுகின்றனர்.

 

பொறாமைப்படுபவர்கள்

ஒருவரின் அதிகப்படியான பொறாமை அவர்களை கொலை செய்யத்தூண்டும் முக்கியமான குணமாகும். தங்கள் துணை வேறொருவருடன் பழகும்போதும், அவர்கள் எதிர்பாலினத்தவருடன் அதிக நேரத்தை செலவிடும் போது ஏற்படும் அதீத பொறாமை பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த கொலையாளிகள் இருக்கக்கூடிய ஆழ்ந்த உடைமை, தங்கள் மனைவி அவர்களை நேசிக்கவில்லை, அல்லது எப்படியாவது அவர்களை குறைவாக நேசிக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களைக் கொண்டிருக்கிறார்கள் என்ற சித்தப்பிரமை மாயைகளிலிருந்து உருவாகிறது. இதன் துரதிர்ஷ்டமான முடிவு கொலை அல்லது தற்கொலையாக இருக்கும்.

 

ஏற்கனவே கொலை செய்தவர்கள்

ஏற்கனவே கொலை செய்தவர்கள் மீண்டும் தங்கள் மனைவியை மீண்டும் கொலை செய்ய ஒருபோதும் தயங்குவதில்லை. ஏனெனில் கொலை என்பது அவர்களுக்கு புதிதல்ல. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் கொலை செய்தவர்களுடன் வாழ்ந்தால் முடிந்தவரை அவர்களை பாதுகாப்பாக இருக்க எச்சரியுங்கள். தங்கள் மனைவியை கொலை செய்தவர்களில் குற்ற பின்னணி உடையவர்ள் பலர் இருக்கிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.