கல்முனை துளிர்க் கழகத்தின் ஆறாம் கட்ட நிவாரணப் பணியாக 246 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு….
இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நலிவுற்ற குடும்பங்களில் உணவுத் தேவை மோசமான நிலையைக்கு சென்றுகொண்டு இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்ய உலர் உணவுப் பொதிகள் பல அமைப்புக்களால் இக் காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக கல்முனை துளிர்க் கழகத்தின் ஆறாம் கட்ட நிவாரணப் பணி நேற்றய தினம் (08) சீடாஸ் கனடா அமைப்பின் நிதியுதவியுடன் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காயத்ரி கிராமம், விநாயகபுரம் 3, ஸ்ரீ வல்லிபுரம், காஞ்சிரம்குடா, தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த நலிவுற்ற மக்களுக்கு பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ஊடாகவும்.
மேலும் நாவிதன்வெளி பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட நாவிதன்வெளி 2, அண்ணமலை, வேப்பைவெட்டுவான் ஆகிய கிராமங்களை சேர்ந்த நலிவுற்ற குடும்பங்களுக்குமாக மொத்தம் 246 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை