விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான ன பென் ஸ்டோக்ஸ் இந்த வருடத்திற்கான விஸ்டனின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கௌரவிக்கும். அந்த வகையில் 2019-2020 சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆஷஸ் தொடர் டிரா ஆவதற்கும், இங்கிலாந்து 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் அவரை விஸ்டன் சிறந்த வீரராக தேர்வு செய்துள்ளது.

பிளின்டாஃப் 2005-ம் ஆண்டு சிறந்த விஸ்டன் விருதை வென்றிருந்தார். அதன்பின் 15 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் தற்போது வென்றுள்ளார்.

இவருடன் ஜோப்ரா ஆர்சர், பேட் கம்மின்ஸ், மார்னஸ் லாபஸ்சேன், வீராங்கனைகள் எலிஸ் பெர்ரி, சிமோன் ஹார்மர் ஆகியோரையும் குறிப்பிட்டிருந்தது.

ஜோப்ரா ஆர்சர் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்தார். ஆஷஸ் தொடரில் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் சவாலாக விளங்கியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.