தல செஞ்சா சரியாதான் இருக்கும்.. வரிசையாக அறிவிப்புகளை வெளியிடும் பிரபலங்கள்
உலகமெங்கும் தற்போது ஒரே ஒரு பிரச்சனை தான் ஆட்டிப்படைத்து வருகிறது. அதுதான் சீனாவில் இருந்து புறப்பட்டு வந்த கொரானா. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு உள்ளதால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சினிமாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போனது.
இதனால் பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி சக நடிகர்களிடம் தொழிலாளர்களுக்கு உதவுமாறு பரிந்துரை செய்து வந்தார். அந்த வகையில் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கொரானா நிவாரண நிதிக்காக மத்திய மாநில அரசுகள் பொதுமக்களிடம் பணம் கேட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முதன்முதலில் அனைத்துக்கும் பணம் கொடுத்தவர் தல அஜித். சுமார் 1.25 கோடி வரை கொடுத்துள்ளார். அஜித் தனது அறிவிப்பை வெளியிட்ட பிறகுதான் அடுத்தடுத்த நடிகர்கள் தொடர்ந்து நிதி கொடுக்க முன் வருகின்றனர்.
தற்போது ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் 3 கோடியை கொரானா நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். தல அஜீத்துக்கு பிறகு கோடிகளில் வழங்கிய ராகவா லாரன்சை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இன்னும் பல முன்னணி நடிகர்கள் வாய் திறக்காமல் இருப்பது தமிழ் சினிமாவே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை