பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜின் மனைவியை கவனித்தீர்களா.! அதுவும் தலைவர் கூட ஆரம்ப காட்சிலயே வருகிறார்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ்க்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. இவர் இயக்கத்தில் வெளிவந்த பீசா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.
ஓரளவு கிடைத்த படத்தின் வெற்றியை வைத்துதான் தலைவர் ரஜினிகாந்தை வைத்து போன வருடம் பேட்ட படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றியும் கொடுத்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 220-250 கோடி வரை வசூல் செய்தது.
கார்த்திக் சுப்புராஜ் தனது மனைவியை பேட்ட படத்தில் அறிமுகப்படுத்தி இருப்பார், அதாவது தலைவர் ரஜினிகாந்த் வார்டனாக கல்லூரியில் சேர்வதற்கு வரும் காட்சியில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி சத்திய பிரேமா நடித்து இருப்பார். கார்த்திக் சுப்பராஜ்க்கு இவ்வளவு அழகான மனைவியா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த இயக்கத்தில் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற கேங்ஸ்டர் படத்தை முடித்துள்ளார். இந்த படம் மே ஒன்றாம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது இருக்க உள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளிவரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் குடும்பமே ரஜினி ரசிகர்களாம் அதனால் அந்த படத்தில் நடிக்க வைத்தாராம் மீண்டும் அவர் இயக்கம் எந்த படத்திலும் அவரது மனைவி நடிக்க மாட்டார் என கூறுகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை