சமூர்த்தி பெற தகுதியுடைய குடும்பங்களுக்கு மானியம் வழங்கிவைப்பு…
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் வடக்கு மேற்கு சமூர்த்தி வங்கியினாடாக பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , பிரதேசங்களில் பிரதேச செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் மேற்பார்வையில் வீடு வீடாக மானியம் வழங்கி வைக்கப்பட்டது .
சமூர்த்தி பெற தகுதியுடையோர் பட்டியலில் காத்திருப்போர் 697 பேருக்கான இரண்டாம் கட்ட மானியமாக பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டது.
எஸ் .தவசீலன் வங்கி முகாமையாளர். தலைமை சமூர்த்தி முகாமையாளர் கே.இதயராஜா,ஏ.எல்.எம.நஜீப் சமூர்த்தி திட்ட முகாமையாளர்,சமூத்தி உத்தியோகத்தர்களாகியோர் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.
சமூர்த்தி பெறும் 5108 குடும்பத்திற்கு இதற்கு முன்னர் தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை