அட்லீயின் சூழ்ச்சியால் ராஜாராணி பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகர்.. இனி உன் படத்தில் நடிக்க மாட்டேன் என சபதம்
வெறும் நான்கே நான்கு படங்களை மட்டுமே இயக்கி விட்டு தற்போது 30 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே இயக்குனர் என்றால் அது அட்லீ மட்டுமே. விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
தற்போது பாலிவுட் சென்று ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார். ஆனால் அட்லீயின் மீது தயாரிப்பு தரப்பு எப்போதுமே கடுப்பாக தான் இருக்கிறது. சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு செய்தால் தமிழ்நாட்டில் அட்லீயை வைத்து இனி படம் எடுக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில்தான் அட்லீ செய்த சூழ்ச்சி ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. அட்லீ இயக்கிய முதல் படம் ராஜா ராணி. மணிரத்தினத்தின் மௌனராகம் படத்தின் தழுவல்தான் என அப்போதே அட்லீ மீது புகார்கள் எழுந்தன.
ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவாகி செம ஹிட் அடித்த படம். ஆனால் இந்த படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தவர் அட்லீயின் நீண்டகால நண்பர் சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்துதான் இந்த படத்தை இயக்க இருந்தாராம்.
ஆனால் ஒரு சின்ன சான்ஸ் கிடைத்து ஆர்யாவிடம் கதை கூறிய அட்லீ, பெரிய நடிகர்கள் அந்த கதைக்குள் வந்த பிறகு சிவகார்த்திகேயனை பிறகு பார்த்துக்கலாம் என விட்டுவிட்டாராம். இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் இனிமேல் உன்னுடைய படங்களில் நடிக்கவே மாட்டேன் என சபதம் எடுத்து விட்டுச் சென்றாராம்.
குறும்படங்கள் எடுக்கும் காலத்திலிருந்து நண்பர்களாக இருந்த சிவகார்த்திகேயன் அட்லீ தற்போது அதிகமாக பார்த்துக்கொள்வதும் பேசிக் கொள்வதும் இல்லை என்பதற்கு இதுதான் காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை