இனி ட்விட்டரில் பொய் வசூல் சொல்லி யாரையும் ஏமாற்றமுடியாது.. கோலி மூட்டிகளுக்கு விழுந்த ஆப்பு
கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளர்கள் சொல்வதை கூட கேட்காமல் பெரிய நடிகர்களின் ரசிகர்கள் ட்விட்டரில் யாரோ ஒருவர் படத்தினை பற்றியும் படத்தின் வசூலை பற்றியும் தவறான தகவல்களை பகிர்வதை உண்மை என நம்பி ரசிகர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு நடிகர்களுக்கு கசப்பான செய்தியாக இருந்தாலும் ரசிகர்களின் மனநிலையைப் பொறுத்த வரை இது நியாயமானதாக கருதப்படுகிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாக்களிலும் ட்விட்டரில் ரசிகர்கள் பெரிய நடிகர்களின் வசூல்களை ஒப்பிட்டு சண்டை போட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வருகின்ற மே மாதம் முதல் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தின் வசூலையும் தயாரிப்பாளர் சங்கம் நேரடியாக ரசிகர்களுக்கு தெரிவிக்கும் என தீர்மானம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் டுவிட்டரில் டிராக்கர் என்ற பெயரில் பொய் சொல்லி தயாரிப்பாளர்களிடம் பணம் பறிக்கும் ஒரு சிலரை அடக்கி ஒடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் இதேபோல் தமிழ் சினிமாவிலும் முடிவு எடுக்கப்படும் என கூறுகிறார்கள்.
கருத்துக்களேதுமில்லை