இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த செயற்கைகோள் படத்தை வெளியிட்டது நாசா
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைவடைந்து வருவதாக கூறப்படுகின்றது.
வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை