காசல்ரி நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்ற ஓர் பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி பரிதாப மரணம்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ டங்கல் பகுதியில் இன்று மாலை மீன்பிடிக்கச்சென்ற ஒரு பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் காசல்ரீடங்கல் கீழ்ப்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த கோபிநராஜன் சந்திரகுமார் வயது 29 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (12.04.2020) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நீர்த்தேக்கப்பகுதியில் கல்லொன்றின் மேல் இருந்து மீன்பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்.அதனைத்தொடர்ந்து கரைக்கு நீந்தி வரும் போது நீரில் மூழ்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து இரகனுவ வீர்ர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த நபரின் சடலம் மரண விசாரணையின் மற்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துக்களேதுமில்லை