210 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று மட்டும் 12 பேர் பாதிப்பு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் அண்மையில் அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கட்டாரிலிருந்து வருகைதந்திருந்த – கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக அடையாளம் காணப்பட்டவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொரனா தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் – சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருந்தவர்களில் 10 பேர் பரிசோதனைக்காக பொலனறுவை தம்மின்ன கொரோனா தடுப்பு பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்துள்ளன. இதில் முதலாவதாகப் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது.

இதையடுத்து அக்கரைப்பற்றில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 51 பேர் கொரோனா பரிசோதனைக்காக இன்று பொலனறுவை தம்மின்ன கொரோனா தடுப்பு பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.