கொரோனா தொற்று 233…

* இதுவரை 61 பேர் குணமடைவு
* 165 பேர் சிகிச்சையில்
* 7 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றிரவு 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 217 இலிருந்து 233 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 16 பேரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான நபர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்தப் 16 பேரில் 14 பேர் நேற்றிரவுதான் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுள் 08 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தும், 04 பேர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தும், ஒருவர் புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தும், இன்னுமொருவர் மற்றுமொரு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலும் 05 பேர் நேற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரை 61 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

165 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 142 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.