பொலிஸாரின் 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – சுமார் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்குச் சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் நேற்று வரை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த காலப்பகுதியில் சுமார் 215 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதேவேளை, கடந்த மார்ச் 20 திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய சுமார் 26,830 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 6845 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை