எந்திரன் படத்தில் நடிகர் மனோஜ் நடித்துள்ளார் தெரியுமா.. ஆச்சர்யபடும் அவர் காட்சியை பாருங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் எந்திரன். முதல் முதலில் எந்திரன் படத்தில் கமலஹாசன் நடிக்க இருந்தது.
அந்த வாய்ப்பை அவர் தவற விடவே அதன்பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியிருப்பார்.
படம் வெளியாகி 10 வருடங்களாக இருந்தாலும் தற்போதும் பார்க்கத் தூண்டும் ஒரு திரைப்படமாக எந்திரன் அமைந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்டவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிதான்.
தாஜ்மஹால், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான மனோஜ் அதன் பிறகு சரியான கதை தேர்வு செய்யாமல் தொடர் தோல்வி படங்களை கொடுத்து சினிமாவை விட்டு விலகினார். இடையில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அன்னக்கொடி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த மனோஜ் தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். பத்து வருடங்கள் கழித்து எந்திரன் படத்தில் மனோஜ் ரஜினிக்கு டூப் போட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் எந்திரன் படம் உருவாகும் போது மனோஜ் அந்த படத்தில் ரஜினிக்கு டூப் போட்டுள்ளார் என்று எந்தவித செய்தியும் வெளிவரவில்லை. ஒருவேளை அப்படி ஏதாவது செய்திகள் வெளிவந்திருந்தால் மனோஜுக்கு சினிமாவில் இன்னொரு வாய்ப்பு கிடைத்து இருக்கலாமோ எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
மனோஜ் தான் நடித்த காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவின் மூலம் வெளியிட்டு வருத்தங்களை வெளியில் சொல்லாமல் ஆதங்கப்பட்டுள்ளார். இதனை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை