குறைந்த செலவில் பெரிய அளவில் கல்லா கட்டும் அட்லீ.. ஊருக்கே பழைய சோறு, உனக்கு மட்டும் பிரியாணியா?

தமிழ் சினிமாவில் உள்ள அனைவரும் பொறாமைப்படும் ஒரே ஒரு இயக்குனர் என்றால் அது அட்லீ மட்டும்தான். வெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கிய நிலையில் தற்போது அவரின் சம்பளம் 25 கோடிக்கும் மேல்.

அட்லீ இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஜீவா ஸ்ரீதிவ்யா சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகிய சங்கிலி புங்கிலி கதவ தொற என்னும் படத்தை முதன் முறையாக தயாரித்தார்.

முதலுக்கு மோசம் இல்லை என்பதைப்போல போட்ட பணத்தை திருப்பி கொடுத்தது அந்த படம். மிகவும் குறைந்த பட்ஜெட் என்பதால் விவரமாக அந்த படத்தை தயாரித்தார் அட்லீ. இப்பொழுது கைதி புகழ் அர்ஜுன் தாஸ் நடிக்கும் அந்தகாரம் படத்தை தயாரித்துள்ளார்.

அந்தகாரம் படத்தின் தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்றாலும் அட்லீயும் தன்னுடைய ஏ பார் ஆப்பிள் என்ற நிறுவனம் மூலம் இணை தயாரிப்பாளராக சேர்ந்துள்ளார். இதனால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அந்தகாரம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் மற்ற தயாரிப்பாளர்கள் அட்லீயின் மீது செம காண்டில் இருக்கிறார்களாம். அதாவது அட்லீ மற்றவர்களுக்கு படம் இயக்கும்போது தேவையில்லாத செலவுகளை அதிகம் செய்து தயாரிப்பாளர்களை சிரமத்தில் தள்ளினாராம்.

ஆனால் சொந்தமாக படம் தயாரிக்கும் போது மட்டும் பட்ஜெட்டை மீறி ஒரு பைசாகூட செலவு செய்ய மாட்டேன் என்கிறாராம். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் அட்லீயை வைத்து படம் எடுக்கப் போவதில்லை என தயாரிப்பாளர்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.