அடுத்த படத்திற்கு அதிரடியாய் ரெடியாகும் விஜய்.. கட்டுமஸ்தான உடலில் மிரட்ட போகும் தளபதி 65
மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி விஜய் தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம். ஆனால் இன்னும் தளபதி 65 படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் கொஞ்சம் அப்செட்டில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக வெளியீடு தள்ளிச் சென்றது. ஏற்கனவே அனிருத் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய், தளபதி 65 படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 65 படத்திற்காக விஜய் இதுவரை கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார் என்ற செய்தி தமிழ் சினிமாவை அதிர்ச்சி அடைய வைத்தது.
இதற்கு முன் விஜய்யை இயக்காத புது இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டது இளம் இயக்குனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வெற்றிமாறன், மகிழ்திருமேனி, பாண்டிராஜ், சுதா கொங்கரா, அருண்ராஜ் காமராஜ் என அனைத்தும் விஜய்க்கு புது முகமே.
இறுதியில் இடையில் புகுந்து ஆட்டையை குழப்பினார் ஏ ஆர் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக தளபதி விஜய்யை சம்மதிக்க வைத்ததாகத் செய்திகள் வெளிவந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
முருகதாஸ் தான் என உறுதியான தகவல்கள் வெளியான நிலையில் விஜய் இளம் இயக்குனர்கள் யாராவது ஒருவருடன் இணைந்து இருக்கலாம் எனவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இருந்தாலும் இதுவரை இல்லாத அளவுக்கு நிறைய விமர்சனங்களுக்கு உள்ளான முருகதாஸ் விஜய்யை வைத்து பிரம்மாண்ட ஹிட் கொடுக்க கதையை தீட்டி வருவதாகவும், விஜய்யின் தோற்றத்தை ஏற்கனவே இருந்ததை விட கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாற்ற இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
கருத்துக்களேதுமில்லை