கொரோனா தடுப்பு – அமெரிக்காவுக்கு பாடம் சொல்லும் சீனா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலானது உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் திறம்பட செயற்பட உலக சுகாதாரம் தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார்.

அதனடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவியினை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக அறிவித்தார்.

குறித்த அறிவித்தலுக்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் உட்பட பல தலைவர்கள் தமது வருத்தங்களையும் விசனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் ஷாஓ லிஜியானிடம், தற்போது நிலவும் பண பற்றாக்குறைகளை தீர்க்க சீனா நடவடிக்கை எடுக்குமா என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், சமகால தேவைகளை கருத்திற்கொண்டு குறித்த பிரச்சனைகளை சீனா ஆராய்ந்து வருகிறது என தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தானத்தின் பிரதான பண உதவியாளராக காணப்படும் அமெரிக்கா கடந்த வருடத்தில் மாத்திரம் குறித்த அமைப்புக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் 2 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பாதித்துள்ள நிலையில், வாஷிங்டன் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தீர்மானமானது உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.