பிரித்தானியாவில் இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியா வேகமாக செயற்படவில்லை என பிரித்தானிய எதிர்க் கட்சி தலைவர் கெயிர் ஸ்ட்ரோமர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் ஆரம்பித்தாலும் அதன் தாக்கம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மிக விரைவாக நிலைகொள்ள ஆரம்பித்தது.  இதனைத் தொடர்ந்து குறித்த நாடுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வந்தனர்.

இந்நிலையில் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கெயிர் ஸ்ட்ரோமர் தடுப்பு நடடிக்கைகள் அந்நாட்டு அரசாங்கத்தினால் மந்தகதியிலேயே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஏனைய ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை பிரித்தானியாவில் அமுல்படுத்த பிரதமர் பொரிஷ் ஜோன்சன் மறுத்ததாகவும், அதனடிப்படையில் பிரித்தானியாவில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பிரித்தானியாவில் 12000க்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பதாக உத்தியோகப்பூர்வ தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை கட்டுப்படுத்த பிரித்தனிய அரசாங்கம் கடந்த சில வாரங்களாக முன்னெடுத்த நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியிலேயே இருந்தது எனவும் ஏனைய நாடுகளிடம் இருந்து பாடம் கற்க பிரித்தானிய தவறிவிட்டது எனவும் குற்றம் சுமத்தியுள்ள அவர், இத்தவறுகளை மீண்டும் இழைக்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.