KDPS இன் 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை இன்று: மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் செயல் அட்டைகள் பாடசாலை அதிபர்களிடம் கையளிப்பு….
KDPS அமைப்பின் அடுத்த அம்சமாக 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை ஆக தரம் 10 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் செயல் அட்டைகள் அனைத்தும் இன்று (15) காரைதீவு பிரதேச பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் அயல் கிராமமான அட்டப்பள்ளம் வித்தியாலயத்தின் தரம் 3 தொடக்கம் தரம் 9 மாணவர்களுக்கும் மாதிரி வினாத்தாள் செயல் அட்டைகள் அதிபர் திரு.ரகுநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
உயர்தர மாணவர்களுகாக, அதிபர் திரு.S.சுந்தரராஜன் (VCC) அதிபர் திரு.ரகுபதி (RKM GIRLS) அதிபர்.திரு.மணிமாறன் (SHANMUGA) வர்களிடம் KDPS தலைவர் மற்றும் அங்கத்தவர்களால் ஒப்படைக்கப்பட்டது.
செயலட்டைகள் அனைத்தும் அதற்குரிய ஆசிரியர்களினூடாக மாணவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. மாணவர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
அத்துடன்,KDPS அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.S.புவனேந்திரன் அவர்களும் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை