சிம்பு, பிரபுதேவாவுடன் பிரிந்ததற்கு இதான் காரணம்.. பல கதைக்கு முற்றுபுள்ளி வைத்த நயன்தாரா
காதலில் பழம் தின்னு கொட்டை போட்டவர் நயன்தாரா என்பது அனைவரும் தெரிந்ததே. ஏனென்றால், தனது முதல் காதலை சிம்புவுடன் தொடங்கி பிரிந்தார். நயன்தாரா மற்றும் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பு என்பது ரசிகர்களுக்கு மட்டுமே அவர்களுக்கு அல்ல.
பின்பு இந்து மதத்திற்கு மாறி பிரபுதேவாவை காதலித்து வந்த நயன்தாரா அவரை திருமணம் செய்வது போன்று உறுதியாகி அதுவும் கைவிடப்பட்டது. தற்போது இயக்குனர் விக்னேஸ்வரனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த காதல் தான் நீண்ட நாட்களாக போய்க் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் பஞ்சமே இல்லை ஏனென்றால் ஊரடங்கு உத்தரவில் கூட இன்னும் நெருக்கமாக இருப்பது போன்றும் வீடியோக்கள் வெளிவந்தது. கொரோனா நிதியுதவி இவ்வளவு கொடுத்தால் போதும் என்று கட்டளையிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க நயன்தாரா ஒரு பேட்டியில் சிம்பு மற்றும் பிரபுதேவா இடையே ஏற்பட்ட காதல் எப்படி முறித்தது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது இதற்கு முக்கிய காரணமாக நம்பிக்கை இல்லாதது, அதாவது சினிமா என்றாலே பல பேர் கூட நேரத்தை செலவிட வேண்டி இருக்கும் என்பதுதான்.
இதில் நம்பிக்கை ரொம்ப முக்கியம். மேலும் காதலில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாழ்க்கை நடத்துவதை விட தனியாகவே வாழ்ந்து விடலாம். அது தான் நிம்மதியான வாழ்க்கை என்று நயன்தாரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ ஊரடங்கு சமயத்தில் இது போன்ற சுவாரசியமான செய்திகளை கேட்பது பொழுதுபோக்கு தான். நயன்தாரா தன் காதல் தோல்வியில் இருந்த சமயங்களில் ரசிகர்களுடைய பாராட்டுக்களும் ஆதரவும் நிறைய இருந்ததாகவும், அதனால் தான் இன்றளவும் நம்பர்-1 நடிகையாக இருப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இப்போது காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விக்னேஸ்வரனுடன் இணைந்து திருமணம் செய்து கொண்டால் மகிழ்ச்சி தான்.
கருத்துக்களேதுமில்லை