காதல்ல பிரச்சினையா? வீட்ல ஏத்துக்கலையா? இதோ உங்களுக்காகத் தான் இது… படிங்க…
எல்லாருக்கும் ஒருமுறையாவது காதல் என்பது வருகிறது. இங்கே காதலிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. ஆனால் எத்தனை பேருக்கு இந்த காதல் வெற்றி பெறுகிறது என்றால் அது கேள்விக்குறி தான். காதலிக்கும் போது மனசும் மனசும் ஒத்துப் போனால் போதும் என்று தோன்றும். ஆனால் கல்யாணம் என்று வரும் போது நம் சமூக சூழ்நிலையில் இரு குடும்பங்கள் ஒத்துப் போக வேண்டியிருக்கிறது. காதலித்து அடுத்த கட்டமாக திருமணத்திற்கு போக துடிக்கும் ஒவ்வொரு காதலர்களும் சாதி, மதம், குடும்ப அந்தஸ்து, குடும்ப மரியாதை, குடும்ப சூழ்நிலை என்று நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
96 காதல்…
காதலிக்க ஆரம்பித்து விட்டு அதிலிருந்து வெளியேறவும் முடியாமல் உள்ளே போகவும் முடியாமல் உறவை முறித்துக் கொள்ள முடியாமலும் நிறைய காதலர்கள் வலியை அனுபவித்து வருகின்றனர். காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். உண்மையில் காதலிக்கும் போது இந்த சிக்கல்களையெல்லாம் நாம் யோசிப்பதில்லை என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். இன்றும் 96 மாதிரி நிறைய காதல்கள் நிறைவு பெறாமல் வலியாக எல்லோர் மனதிலும் இருக்கிறது. இதற்கு காரணம் காதலர்களுக்கு திருமணத்தை பற்றிய சரியான முடிவை எடுக்க தெரிவதில்லை. உண்மையில் அவர்கள் உறவு அடுத்த கட்டத்துக்கு தகுதியானதா என்பதை அவர்கள் யோசிக்க வேண்டும். அதற்கு அவர்கள் சில கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக் கொள்வது நல்லது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
அப்படி காதலில் ஏற்படும் சிக்கல்களை எப்படி கையாளலாம் அதை திருமணம் வரை கொண்டு போக நாம் என்ன செய்ய வேண்டும் என்று உளவியல் நிபுணர் நமக்கு பதிலளிக்கிறார்கள். உங்க காதலும் வெற்றி பெற இந்த கேள்விகளை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்.
காதல் அனுபவம்
எனக்கு வயது 24. நான் இந்தியாவின் புகழ்பெற்ற பி-ஸ்கூலில் MBA படித்து வருகிறேன். அங்கே எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். எங்கள் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் அவர் என்னை காதலிப்பதாக கூறினார். என்னால் அதை ஏற்கவும் முடியவில்லை அதே நேரத்தில் ஒதுக்கவும் முடியவில்லை. காரணம் நானும் அவரை காதலிக்கிறேன். அவரிடம் என் காதலை நான் சொல்லவில்லையே தவிர நாங்கள் இருவரும் உணர்வு ரீதியாக உடல் ரீதியாகவும் நெருங்க ஆரம்பித்து விட்டோம் என்பது எங்களுக்கு புரிந்தது. ஆனால் எங்க காதலை திருமணத்திற்கு அடுத்த படியாக எடுத்துச் செல்ல நினைக்கும் போது நிறைய சிக்கல்கள் எங்கள் மனதில் எழுகிறது.
ஆனால் காதல் வலிகள் எங்கள் உறவை முறித்துக் கொள்ள விடவில்லை. அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. நிறைய தடவை பிரேக் அப் செய்ய முயற்சித்தும் எங்களால் காதலில் இருந்து வெளியேற முடியவில்லை. தினமும் வருந்தி வருகிறோம். எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று உளவியல் நிபுணரிடம் அவர் கேட்டு உள்ளார்.
எங்கள் எதிர்காலத்தை ஒன்றாக இணைக்க முடியுமா?
என்னுடைய குடும்ப பிண்ணனியும் அவருடைய குடும்ப பிண்ணனியும் மாறுபட்டது. ஏன் காதலிக்கும் போது இதெல்லாம் தெரியாதா என்பீர்கள். கண்டிப்பாக காதலிக்கும் போது இதெல்லாம் புரியாது. எங்களுக்கும் அது தான் நடந்தது. அவருடைய பெற்றோர்கள் படிக்காதவர்கள் என்பதால் குடும்பத்தை தாங்கும் பொறுப்பு அனைத்தும் இவரிடம் தான் உள்ளது. ஆனால் ஆரம்பத்தில் அவர் இதைப் பற்றி சிந்திக்கவில்லை. என் எதிர்காலம் அவருடன் இணையுமா?
என் வேதனை அதிகமாகிறது
அவர் என்னை மிகவும் காதலிக்கிறார். அவர் என் மேல் பொழிந்த அன்பை நினைக்கும் போது காலம் முழுவதும் அவருடன் இருக்க ஆசைப்படுகிறேன். நான் அவரை நேசிக்கிறேன். உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நாங்கள் நெருங்க ஆரம்பித்து விட்டோம். நிறைய தடவை பிரேக் அப் பற்றி பேசிய பிறகும் கூட எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அவர் அவருடைய பெற்றோரை பார்ப்பாரா இல்லை என்னை தேர்வு செய்வாரா என்ற குழப்பம் தற்போது என்னுள் எழுந்துள்ளது. ஏனெனில் அவருடைய சாதி, குடும்ப அந்தஸ்து காரணமாக என் பெற்றோர் இதை ஏற்க மாட்டார்கள் என்ற பயம் என்னுள் எழுந்துள்ளது. இதனால் நாங்கள் பெரிய குழப்பத்தில் இருந்து வருகிறோம்.
முடிவெடுப்பதில் குழப்பம்
எங்கள் உறவை எப்படி முன்னோக்கி செலுத்துவது என்ற குழப்பம் எங்களுக்குள் இருக்கிறது. இந்த உறவை தொடர்ந்தால் ஒரு வேளை எதிர்காலத்தில் பிரிவு ஏற்பட்டால் பிறகு இருவருக்கும் அது சங்கடமாகி விடும் என்று அவர் யோசிக்கிறார். நான் தான் அவருடைய முதலை காதல். அவர் குறைந்த அளவு சம்பாதிப்பதால் என்னை திருப்தியாக எதிர்காலத்தில் வைக்க முடியுமா என்று வருத்தப்படுகிறார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. எங்கள் காதலை வெற்றியாக்க எங்களுக்கு உதவுங்கள் என்று அந்தப் பெண் கேட்டுள்ளார்.
உளவியல் நிபுணரின் ஆலோசனைகள்
இந்த குழப்பம் எல்லாருக்கும் ஏற்படும் விஷயம் தான். இந்த காதல் வேதனை கொஞ்ச நாளில் மாறக் கூடியது என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காதலில் சரியான முடிவு எடுப்பது உங்க எதிர்காலத்தை சந்தோஷமாக்கும். கண்டிப்பாக நான் உங்களுக்கு உதவுகிறேன்.
காதலர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
காதலிப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். சிலர் காதலிக்க விரும்பிகிறார்கள் ஆனால் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. சிலர் எத்தகைய கஷ்டம், எதிர்ப்பு வந்தாலும் அதையும் மீறி திருமணம் செய்து கொள்ள முற்படுகின்றனர். எல்லாரும் முன்னுரிமை எதற்கு கொடுக்க வேண்டும் என்று ஆராய்ந்தே இதை முடிவு செய்கின்றனர். முதலில் உங்களுக்கு மிகவும் முக்கியமானது எது என்று எடை போட வேண்டும்.
காதல் வேறு திருமணம் என்பது வேறு
திருமணம் என்பது ஒரு நாள் விவகாரம் அல்ல. காலம் முழுவதும் தொடரக் கூடிய பந்தம். எனவே காதலர்கள் தங்கள் விஷயத்தில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். நீங்கள் இருவரும் உட்கார்ந்து வாழ்க்கையில் உங்க முன்னுரிமைகளை எடை போட வேண்டும். உண்மையாக ஒருவருக்கொருவர் காதலிக்கும் போது அதிலிருந்து வெளியேறுவது கஷ்டம் தான். ஆனால் திருமணம் என்று வரும்போது இரண்டு குடும்ப உறவுகளுடன் முடிச்சுப் போட போகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். எனவே உங்க பகுத்தறிவு, நடைமுறை எதார்த்தங்களை மனதில் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.
கலந்துரையாடுங்கள்
இந்த ஆலோசனைகளை மனதில் வைத்து இருவரும் இணைந்து ஒரு முடிவுக்கு வாருங்கள். முதலில் இருவரும் குழப்பத்தை விடுத்து மனதிற்கு அமைதியை கொடுங்கள். நீங்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறீர்களா அல்லது தொடர்ந்தால் இந்த உறவு நீளுமா என்பதை கேட்டுக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்று தோன்றினால் அதற்கு தயாராகுங்கள். பெற்றோர்கள் இதற்கு ஒத்து வரவில்லை என்றால் கூட நிறைய விஷயங்களை தியாகம் செய்ய முற்படுங்கள். நீங்கள் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியுமா என்று யோசியுங்கள்.
நீங்கள் காதலில் இருக்கும் போது பொருள் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். சமூக அந்தஸ்து இவற்றை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு நிறைய பொறுப்புகள் உங்கள் கையில் உள்ளது என்பதை மறக்காதீர்கள். அதற்கு நீங்கள் தயராக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு போவது நல்லது.
சிந்திக்கத் தூண்டும்
மேற்கண்ட கேள்விகள் உங்களை தெளிவாக சிந்திக்க வைக்கும். இந்த கேள்விக்கு ஆம் என்ற பதிலை நீங்கள் சுமந்தால் தாராளமாக திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்க காதல் திருமண வாழ்க்கையை ருசிக்கட்டும். ஆனால் இல்லை என்றால் தயவு செய்து ஒரு நல்ல முடிவை எடுக்க முற்படுங்கள். ஒரு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய் மிகவும் வேதனையுடன் பிரிவதை விட இந்த காலக்கட்டம் இதற்கு ஏற்றது என்று உணருங்கள். இருவரும் நேர்மறையாக யோசித்து உறவை பிரிவுக்கு கொண்டு வாருங்கள். அது உங்க எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. இதனால் இருவரும் குழப்பத்தில் இருப்பது தவிர்க்கப்படும்
பகுத்தறிவு முடிவு முக்கியமானது
சரியான நேரத்தில் எடுக்கும் பகுத்தறிவான முடிவுகள் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும். நிறைய காதல் ஜோடிகள் தவறான முடிவை எடுத்து விட்டு பின்னர் கஷ்டப்படுவதை பார்ப்பதுண்டு. சிலர் காதல் திருமணம் செய்த பிறகு அவர்களின் முன்னுரிமைகள் மாறிகின்றன. பிறகு அம்மா அப்பா தான் முக்கியம் என்றோ அல்லது வேறு ஒரு நபர் தான் முக்கியம் என்றோ இந்த திருமண உறவில் இருந்து போவதும் உண்டு. அதே போல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் கூட ஆரம்பத்தில் அதிக ஆர்வம் காட்டாத தம்பதியினர் பின்னாளில் அதிக காதலுடனும் ஆழமான அன்புடனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதும் உண்டு. எனவே முன்னுரிமை மாற்றங்கள் என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவே காதலர்களே! வாழ்க்கையை நோக்கிய யதார்த்தமான பயணத்திற்கு தயராகுங்கள்.
காதல் என்றாலே கல்யாணத்தில் தான் முடியனும் என்று கிடையாது. காதலில் பிரிவும் அழகானது தான். அதுவும் முடிவல்ல. காலங்களும் சமூக மாற்றங்களும் உங்களுக்கு பதில் சொல்லலாம். மாற்றமே வினா மாற்றமே விடையாகும்.
கருத்துக்களேதுமில்லை