ஜப்பானில் அவசரகாலநிலை மேலும் நீடிப்பு!

ஜப்பானில் எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை அவசரகால நிலை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

அங்கு, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமரால் ரோக்கியோ உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுவதால் அனைத்து மாகாணங்களுக்கும் அவசர காலநிலை பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், தொடர்ந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் சுமார் ஒரு இலட்சம் யென் வழங்கப்படும் எனவும் வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் அவசரகால நிலை நீட்டிக்கப்படுவதாகவும் ஷின்சோ அபே குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானில்,நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு 12 பேர் மரணித்துள்ளதுடன் 190 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, மொத்தமாக அங்கு இதுவரை 190 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9 ஆயிரத்து 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.