வாகன ஓட்டுநர்களுக்கு வாகன காப்பீட்டுத் தொகை…
வாகன ஓட்டுநர்களுக்கு வாகன காப்பீட்டுத் தொகைக்குறைப்பை வழங்குவதை தடுப்பதாக காப்பீட்டு நிறுவனங்களால் கூறப்பட்டுவந்த ஒன்ராறியோவின் சட்ட ஒழுங்குமுறையை, கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தை முன்னிட்டு எமது அரசு தளர்த்தியுள்ளது.
“முன்னெப்போதும் கண்டிராத இக்கட்டான இந்நேரத்தில் மக்கள் அசாதரண சூழ்நிலைக்கு முகங்கொடுத்து தமது நிதிநிலை தொடர்பான பல அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றனர். காப்பீட்டு நிறுவனங்களுக்கு நான் சொல்லும் செய்தி மிகவும் தெளிவானது. அதாவது, கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிச் சுமைகளைக் குறைக்கும் வகையில் அவர்களுக்கான நிவாரணத்தினை வழங்க வேண்டும்” என நிதி அமைச்சர் றொட் பிலிப்ஸ் கூறினார்.
இதற்கான நிவாரண நடவடிக்கைகளை காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். எனவே, உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகையினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
கருத்துக்களேதுமில்லை