பச்சை குத்திய பிரபுதேவா பெயரை அப்படியே உல்டாவா மாற்றிய நயன்தாரா.. இனி மாத்துறதுக்கு அங்க இடம் இருக்கா!

சினிமாவில் தற்போது நம்பர்-1 நாயகியாக கலக்கி வருபவர் நயன்தாரா. பல்வேறுவிதமான சர்ச்சைகளில் சிக்கினாலும் அது எதுவுமே நயன்தாராவின் பட வாய்ப்புக்கு எந்த பிரச்சனையும் வராத வகையில் பார்த்துக் கொண்டார். அதிலேயே அவரது கெட்டிக்காரத்தனம் தெரிகிறது.

என்ன தான் நம்பர் 1 நடிகையாக இருந்தாலும் சர்ச்சைகளிலும் அவர் நம்பர் ஒன் நடிகையாக தான் இருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று காதல் செய்து மூன்றாவது காதலருடன் தான் தற்போது ஒழுக்கமாக இருக்கிறார் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

நயன்தாராவின் காதல் வலையில் முதல் முதலில் விழுந்தது நடிகர் சிம்புதான். வல்லவன் படத்தின் போது ஏற்பட்ட மோகத்தினால் இருவரும் காதல் என்பதையும் தாண்டி கண்டமேனிக்கு புகைப்படங்களை வெளியிடத் தொடங்கினர். அதிலும் லிப் டூ லிப் கொடுத்து புகைப்படம் எடுத்து இணையதளத்தில் அவர்களே போட்டதுதான் செம்ம செய்தி.அதன்பிறகு சிம்புவுடன் காதல் முறிவு ஏற்பட்டு சிறிது காலம் தனியாக இருந்த நயன்தாரா அடுத்ததாக ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த முன்னணி நடன இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் அளவுகடந்து ஊர் சுற்றி வந்தனர். பிரபுதேவா மீதுள்ள அதீத காதலால் அவரது பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார்.

ஏன் மதம் மாறும் அளவுக்கு கூட சென்று விட்டார் நயன்தாரா. பாவம் நன்றாக இருந்த பிரபுதேவாவை அலையவிட்டு பொண்டாட்டியை டைவர்ஸ் செய்ய வைத்து குடும்பத்தில் இருந்து பிரித்து ஏகப்பட்ட வேலைகள் செய்தாராம் நயன்தாரா. பின்னர் பிரபுதேவாவையும் கழட்டி விட்டார்.

தற்போது கடைசியாக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நயன்தாராவின் காதல் மோகம் விக்னேஷ் சிவனுடன் முடிந்து விடுமா என கோலிவுட் வட்டாரங்களில் கேள்விகள் எழுகின்றன. ஆனால் நயன்தாராவோ என் மீது நம்பிக்கை வைக்காததால் தான் முன்னாள் காதலர்களை கை விடும் சூழ்நிலை ஏற்பட்டது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஏன் பிரபுதேவா மனைவி கூட சமீபத்தில் நயன்தாரா, ஊர்ல இருக்கும் பெண்களின் புருஷன்களை திருடுகிறார் எனவும், அவரை ரோட்டில் எங்கு பார்த்தாலும் உடைத்து விடுவேன் எனவும் காட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மீது ஏற்பட்ட காதலால் பழைய காதலர் பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி என்பதை மறைக்க முடிவு செய்த நயன்தாரா, தற்போது பாசிட்டிவிட்டி என மாற்றியுள்ளார். இருந்தாலும் ரசிகர் வட்டாரங்களில் இன்னும் நயன்தாராவை அசிங்கமாக பேசி தான் வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.