அஜித்துக்காக பேசிய கதையில் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கொடுமை சார் இது
தமிழ்சினிமாவில் ஓரளவு அறியப்படும் நாயகனாக நடித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்துள்ளது. இருந்தாலும் சமீப காலமாக கண்ணே கலைமானே, மனிதன் போன்ற கருத்துள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு நடிகராக அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் சைக்கோ. இந்த படத்தின் வெற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க தெம்பு கொடுத்துள்ளது.
ஆனால் அது ஓவர் தெம்பாக மாறிவிட்டது போல. இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஆர்டிகல் 15. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த கிரைம் திரில்லர் படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கி வைத்துள்ளார்.
வலிமை படத்துக்குப்பிறகு ஆர்டிகல் 15 படத்தின் ரீமேக்கை தல அஜித்தை வைத்து உருவாக இருந்த போனி கபூருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் கனா படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜா இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த ரசிகர்கள், தல அஜீத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதையில் உதயநிதி ஸ்டாலின் நடித்தால் எப்படி இருக்கும் என இப்போதே சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துவிட்டனர். பெரும்பாலும் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்ற கருத்துகளே பரவி வருகின்றன.
சைக்கோவில் வித்தியாசமாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற உதய ஸ்டாலின் இந்தப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.
கருத்துக்களேதுமில்லை