உங்க டாய்லெட்டும் இப்படி பளிச்னு கண்ணாடி மாதிரி இருக்கணுமா?… வெறும் 5 ரூபாய் செலவு பண்ணுங்க போதும்…

நிறைய வீடுகளில் என்ன தான் ஹார்ப்பக், ப்ளீச்சிங் பவுடர் என்ற நிறைய செலவு செய்து பல பொருள்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் உப்பு நீரால் ஏற்படும் இதுபோன்ற கறை திரும்பத் திரும்ப வரத்தான் செய்யும். அதற்காக கவலையெல்லாம் படாதீங்க. வெறும் 5 ரூபாய் செலவுல பளீச்னு கண்ணாடி மாதிரி மாத்திடலாம். வாங்க.

​டாய்லெட்டின் கடின கறைகள்

samayam tamil

கடின நீர் கறைகள் குழாய்கள், ஷவர்கள், சிங்குகள், மற்றும் டாய்லெட்டுகளில் விரைவாக உருவாகிறது. காலப்போக்கில் துரு மற்றும் அதிக அளவு கறைகள் உண்டாகி பார்க்கவே அசிங்கமாக காட்சி தருகிறது. பெரும்பாலும் இந்த கறைகளை நீக்குவது மிகவும் கடினம்.

டாய்லெட்டை தவிர வேறு எங்கும் இது இவ்வளவு சிக்கலானதாக இருப்பதில்லை ஏனென்றால், கழிவறையை தான் அதிகமாகப் பயன்படுத்துகிறோம் மேலும் தொடர்ந்து அங்கே தண்ணீர் தேங்குகிறது.

டாய்லெட்டில் உப்புநீர் கறைகளை அகற்றும் பல வர்த்தக தயாரிப்புகள் கடைகளில் கிடைத்தாலும் கடுமையான இரசாயனங்கள் இல்லாமல் உங்கள் டாய்லெட் பவுலில் உள்ள அசிங்கமான கறை வளையங்களை நீக்கும் பல்வேறு பயனுள்ள வீட்டு தயாரிப்புகள் இருக்கின்றன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்

​பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

samayam tamil

பேக்கிங் சோடா வினிகர் இந்த இரண்டும், டாய்லெட்டில் உள்ள உப்புநீர் கறைகள் உட்பட பல்வேறு பொருட்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மிகவும் பயனுள்ள வீட்டு உபயோகப் பொருட்களாகும்.

சுமார் ஒரு கப் வினிகரை டாய்லெட் பவுலில் ஊற்றி டாய்லெட் பிரஷ் கொண்டு சுற்றிலும் தேய்த்து விடுங்கள். 1 நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். பிறகு ஒரு கப் பேக்கிங் சோடாவை டாய்லெட் பவுலில் ஊற்றவும். அதன் பின் 1 முதல் 2 கப் வினிகரை மறுபடியும் சேர்க்கவும். இதனால் நுரை பொங்கி கொண்டு வரும். இந்த கரைசலை 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள்.

டாய்லெட் பிரஷ் கொண்டு இந்த கரைசலை பவுலை சுற்றிலும் தேய்த்து விடுங்கள். தேய்க்கும் போது நீர் மட்டத்திற்கு மேலே உள்ள உப்பு நீர் கறை வளையங்களின் மீது கரைசல் படிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்தக் கட்டத்தில் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்ய வேண்டாம்.

இந்த வினிகர் சோடா கரைசலை 30 நிமிடம் ஊறவிடுங்கள். கறைகள் போகும் வரை ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் நன்றாக தேய்த்து விடுங்கள். இன்னமும் கறைகள் இருந்தால் டாய்லெட் பிரஷ் அல்லது கடினமான பற்களை கொண்ட நைலான் பிரஷினால் அழுத்தித் தேய்த்து விடுங்கள். இப்போது டாய்லெட்டை ஃப்ளஷ் செய்து அலசுங்கள்.

குறிப்பு : உங்களிடம் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் குறைவாக இருந்தால் அவற்றை பாத்ரூம் சிங்க் கால்வாயை சுத்தம் செய்யும் சில, வீட்டில் தயாரிக்கப்பட்ட வடிகால் சுத்தம் செய்யும் கரைசல்களுடன் சேர்த்து அதன் வீரியத்தை அதிகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

​போரக்ஸ் மற்றும் வினிகர்

samayam tamil

போரக்ஸ் ஒரு மல்டி பர்பஸ் க்ளீனிங் தயாரிப்பு ஆகும். இது டாய்லெட் மற்றும் குழாய் அமைப்புகளில் படியும் கடின நீர் கறைகளை திறம்பட நீக்கப் பயன்படுத்தப்படுகிறது.

டாய்லெட் பவுலில் ¼ கப் போரக்ஸை ஊற்றி டாய்லெட் பிரஷ்ஷை கொண்டு பவுலைச் சுற்றித் தேய்க்கவும்.

அத்துடன் 1 கப் வினிகரையும் ஊற்றி இந்த கலவையை டாய்லெட்டில் சுமார் 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

கறைகளை நீக்க டாய்லெட் பவுலை பிரஷ் கொண்டு தேய்க்கவும். இப்போது டாய்லெட்டை ஃப்ளஷ் செய்து அலசவும்.

​போரக்ஸ் பேஸ்ட்

samayam tamil

உண்மையில் விடாப்பிடியான டாய்லெட் கறைகளுக்கு போரக்ஸ் பேஸ்டை முயற்சி செய்து பாருங்கள்.

டாய்லெட்டுக்கு வரும் தண்ணீரை சுவற்றில் பொருத்தப்பட்ட குழாய் வால்வை அடைத்து நிறுத்தவும். பிறகு பவுலை சுத்தம் செய்ய டாய்லெட்டை ஃப்ளஷ் செய்து உலர்வாக வைக்கவும். தண்ணீர் கறைகளை மறைக்காமல் இருப்பதற்கு இதைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

¼ கப் போரக்ஸுடன் போதுமான அளவு வினிகரை கலந்து ஒரு திக்கான பேஸ்டாக செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை கலந்த உடன் உடனடியாக உப்புநீர் கறைகள் உள்ள டாய்லெட்டில் பரவலாக தேய்க்கவும். பேஸ்ட் டாய்லெட்டில் முழுமையாக பரவி இருக்க வேண்டும். போரக்ஸ் விரைவாக கெட்டிப்பட்டு விடும். எனவே நீங்கள் இந்த பேஸ்டை பயன்படுத்த நீங்கள் தயாராகும் வரை வினிகரை சேர்க்க வேண்டாம்.

இந்த பேஸ்டை 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

கடினமான பற்களை கொண்ட நைலான் பிரஷ்ஷினால் கறைகளின் மீது பேஸ்டை அழுத்தித் தேய்க்கவும். பிறகு டாய்லெட்டை ஃப்ளஷ் செய்து கழுவி விடவும்.

​உப்புத்தாளை கொண்டு தேயுங்கள்

samayam tamil

டாய்லெட்டில் கடினமான உப்பு நீர் கறைகளை அகற்ற மற்றொரு தேர்வு 0000 – தரம் கொண்ட ஸ்டீல் நாராகும். (0000 நுண்ணிய தரமாகும்). சுத்தம் செய்ய ஸ்டீல் நார்கள் மட்டுமே போதுமானது அல்லது வெறும் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்யலாம். ஆனால் வீட்டு உபயோக க்ளீனர்களுடனும் இதைப் பயன்படுத்தலாம். பீங்கான் மேற்பரப்பில் கீறல்கள் ஏற்படுவதைத் தடுக்க 0000 – தரம் கொண்ட ஸ்டீல் நார்களையே பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.

​டாய்லெட்டை வழக்கமாக சுத்தம் செய்யுங்கள்

samayam tamil

டாய்லெட்டில் உப்புநீர் கறைகளைப் போக்க கடுமையான விலையுயர்ந்த கெமிக்கல்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. போரக்ஸ், வினிகர், மற்றும் பேக்கிங் சோடா போன்ற பொருட்கள் சுத்தம் செய்வதிலும் கிருமிகளை அழிப்பதிலும் சிறப்பாக செயல்படுகின்றன. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் கடினமான உப்புநீர் கறைகள் படிவதை இவை தடுக்கின்றன.

உங்கள் டாய்லெட்டை சுத்தமாகவும் உப்பு நீர் கறைகள் இல்லாமலும் வைத்திருக்க போரக்ஸை கொண்டு வழக்கமாக சுத்தம் செய்து முயற்சித்துப் பாருங்கள். இது கடின நீர் கறைகளை மென்மையாக்கி உங்கள் கழிவறையை எளிதாக சுத்தம் செய்ய உதவும். ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போதும் வெறும் ¼ கப் போரக்ஸை பயன்படுத்தினால் போதுமானது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.