ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட பட ஹீரோ இவர்தான்.. சூப்பர் ஸ்டாருக்கே அடித்த ஜாக்பாட்
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி. இவர் இயக்கி வெளிவந்த முதல் படம் ஸ்டூடண்ட் நம்பர் 1, அதற்குப் பின்னர் ஈகா என்ற படத்தை இயக்கினார்.
இந்தப் படம் தமிழிலும் ‘நான் ஈ’ என்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நானி, சமந்தா போன்றவர்கள் நடித்திருப்பார்கள், மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.
அதற்கு பின்னர் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான படம் தான் பாகுபலி இந்த படம் உலக அளவில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது என்றே கூறலாம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2017ஆம் ஆண்டு பாகுபலி conclusion வெளிவந்தது இதுவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான வசூலை அள்ளியது.
ராஜமௌலி ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம் சரண், ஜூனியர் NTR போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். முக்கியமாக சமுத்திரக்கனி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களை பெரும் வரவேற்பு பெற்றது.
தற்போது லாக்டோன் சமயத்தில் கான்பிரன்ஸ் காலில் டிவி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த ராஜமௌலி தனது அடுத்த படத்தை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது பிரபல தயாரிப்பாளர் கே எல் நாராயணனுக்கு ஒரு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படம் விரைவில் எடுக்கப்படும் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை