கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்
கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 26 ஆயிரம் கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை விரைவாக விடுவிப்பது தொடர்பாக இறக்குமதியாளர்கள், சுங்கத் திணைக்களத்தினர், வங்கி முகாமையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, கொள்கலன்களை விடுவிப்பதற்கான கட்டணங்களை செலுத்துவதற்கு வங்கிக் கிளைகளை இன்று(திங்கட்கிழமை) முதல் மேலதிக நேரம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்கலன்களை விடுவிப்பதற்கான முனையங்களை அதிகரிப்பதற்கும் சுங்கத் திணைக்களத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை