கொரோனா காலப்பகுதியில் மக்கள் மனங்களைக் கவர்ந்த பொழுதுபோக்குகள்…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளை மட்டுப்படுத்துமாறோ அல்லது முற்றாக தடை செய்யுமாறோ பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில் மக்கள் பல்வேறுபட்ட பொழுதுபோக்குகளில் தம்மை ஈடுபடுத்தி, குறித்த காலப்பகுதியினை கடத்தி வருகின்றனர்.

உடற்பயிற்சிகள் உணவு தயாரிப்புகள் இசை ஈடுபாடுகள் என நீண்டுகொண்டே போகும் வரிசையில் பல விடயங்கள் உலகளாவிய ரீதியில் பலத்த வரவேற்ப்பினை பெற்றுள்ளது.

அதனடிப்படையில், பல பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் வீட்டுத்தோட்டம் பயிர்செய்யும் பொழுதுபோக்கில் தம்மை ஈடுபடுத்தி அது சார்ந்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வரும் அதேவேளை, குறித்த நடவடிக்கைகளை உதாரணமாக கொண்டு பல பொதுமக்களும் இந்நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர்.

தமது வீடுகளின் மொட்டைமாடியில் அல்லது வீட்டுத்தோட்டம் பயிர்செய்வதற்கு ஏதுவான இடங்களில், வளரக்கூடிய பயிர்கள் மரக்கறி வகைகளை தெரிவு செய்து நிலத்தில் அல்லது சாடிகளில் பயிரிடுகின்றனர்.

இந்நடவடிக்கைகளை பெரும்பாலானவர்கள் தமது பொழுதுபோக்கின் நிமித்தம் மேற்கொண்டாலும், மேலும் சிலர் குறித்த வீட்டுத்தோட்டம் தயாரிப்பதை தமது பிள்ளைகளுக்கான ,முன்மாதிரிகை நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்றான நடவடிக்கைகளில் உணவு தயாரித்தல் மற்றும் ஒரு முக்கிய பொழுதுபோக்காக மாறியிருந்தது. பலர் தமது பிரதேசம் சார்ந்த உணவு வகைகளையும், உலகளாவிய ரீதியில் புகழ் பெற்ற உணவு வகைகளையும் தாமாகவே தயாரிக்க முன்வந்திருந்த அதேவேளை அவற்றை செய்முறைகளுடன் காணொளிகளாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.

இந்தியாவினுடைய புகழ் பெற்ற ரெஸ்லிங்க் விளையிட்டு வீரர் கிரேட் காளி தனது கைகளால் சப்பாத்தி வகையிலான ரொட்டி தாயிருந்து தனது வயோதிப தாய்க்கு ஊட்டிவிட்டிருந்தமை அவரது ரசிகர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்திருந்தது.

அதே போன்று ஆங்கில திரைப்பட நடிகர் நடிகைகள் பலரும் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை விட சுய வேலைகளில் தாமே ஈடுபடுதல் என்ற செயற்பா டும் இக்காலப்பகுதியில் பரவலாக பேசப்பட்ட அதேவேளை குறித்த விடயங்களிலும் பலர் தம்மை ஈடுபடுத்தியிருந்தனர்.

தமது உறவினர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு சிகை அலங்காரம் செய்தல் மற்றும் வீடுகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல வேலைகளில் தாமே முன்வந்து ஈடுபடுதல் என்பன பலராலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லியின் காதலி அனுஷ்கா ஷர்மா, தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் தமது வாழ்க்கை துணைவர்களுக்கு சிகை அலங்காரம் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளிகள் பலரையும் நெகிழச் செய்திருந்தன.

இதனை தாண்டி இசை, வரைதல், கவிதைகள் சொல்லுதல் என நீண்டுகொண்டே சென்ற பொழுதுபோக்கு அம்சங்கள் யாவுமே மனிதர்கள் கடந்த காலங்களில் இருந்த எவற்றையெல்லாம் மறந்து எவ்வாறான ஓர் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக உணர்த்துபவையாக அமைந்த்திருந்தன.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளின் வழியே மக்களை சந்தித்த மக்களுடன் பேசிய அனைவருமே பாதுகாப்பாக இருக்குமாறு அனைவர்க்கும் கோரிக்கை விடுத்திருந்தமை மற்றும் குறித்த வைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தமை மிக முக்கியமான விடயங்களாக பார்க்கப்பட்டிருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.