சினிமாவில் அடுத்த விவாகரத்து.. சுப்பிரமணியபுரம் ஸ்வாதி செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சுவாதி. அதன்பிறகு போராளி, யாக்கை போன்ற படங்களில் நடித்தாலும் முன்னணி நாயகியாக வலம் வர முடியவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கைவசம் சில படங்களை வைத்துக்கொண்டு தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்நிலையில் நல்ல நாயகியாக வளர்ந்து கொண்டிருக்கும் போது திடீரென விமானி விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு அவர் ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் சுவாதி. ஆனால் சமீப காலமாக அவர்கள் செயலில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அப்லோட் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் டெலிட் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சுவாதி விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தியை கிளப்பி விட்டனர். தூக்கிவாரிப் போட்ட சுவாதி உடனடியாக அந்த செய்திக்கு சுடச் சுட பதிலளித்துள்ளார்.

எங்களுக்கு ப்ரைவசி தேவைப்பட்டதால் காரணமாகவே கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்குவதாகவும், அது இன்னொரு இடத்தில் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் ரசிகர்கள் எங்கிருந்தாலும் உண்மையை கண்டுபிடித்து விடுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போல. எப்படியும் இருவருக்கும் பிரச்சினை என கண்டு பிடித்த ரசிகர்கள் அதை ஊதிப் பெரிதாக்கி விட்டனர். இதனால் தற்போது சுவாதி குடும்பத்தில் பெரிய பூகம்பமே ஏற்பட்டுள்ளதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.