இதை பார்த்தாவது தேவர்மகன் 2 படத்துக்கு ஓகே சொல்வாரா தல.. வைரலாகும் அஜித்தின் கொல மாஸ் கெட்டப்

தமிழ் சினிமாவில் அதிக தோல்வியை கொடுத்த நடிகருக்கு எப்படி இவ்வளவு ரசிகர் பட்டாளம் உருவானது என மற்ற மொழி நடிகர்களும் யோசித்து மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு மாஸ் காட்டி வருபவர் தல அஜித்.

இவரது ஒவ்வொரு படங்களும் வெளியாகும் போதும் தமிழ்நாடு திருவிழா கோலம் பூண்டு விடும். அந்த அளவு அவரது ரசிகர்கள் மாஸ் கட்டிவிடுவார்கள். கடந்த வருடத்தில் மட்டும் விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆக இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது வலிமை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் 2020 ஆம் ஆண்டு வலிமை வெளியாக வாய்ப்பில்லை என்பதை போல கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வருடத்தில் அஜித் படம் வெளியாகாத நிலைமை உருவாகியுள்ளது.

அதேசமயம் தல அஜித் தனது அடுத்த படத்திற்கான கதை தேர்வில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்தான் அஜித்துக்கு ஒரு செம வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

கமலஹாசன் சிவாஜி கணேசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி சக்கை போடு போட்ட படம் தேவர் மகன். சாதி படமாக உருவாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் சரித்திர சாதனை படைத்தது இந்த படம். இந்நிலையில் அஜித்தை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய தேவர் மகன் படத்தின் போஸ்டர் ஒன்று கமலஹாசனை வெகுவாக கவர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமலஹாசன் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் நடிக்க தயாராகி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் கமல்ஹாசனின் தற்போதைய சூழ்நிலை கருதி இனி அந்தப் படத்தைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதனால் அந்தக் கதையை தல அஜித்தை வைத்து ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் இயக்கலாம் என கமலஹாசன் யோசித்து வருவதாகத் தெரிகிறது. அப்பா மகன் கதாபாத்திரத்திற்கு தல அஜித் சரியான தேர்வாக இருப்பார் எனவும் அவரது வட்டாரங்களில் கூறியுள்ளனர்.

அப்படி ஒன்று மட்டும் நிகழ்ந்துவிட்டால் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு பெரிய வெற்றியை தல அஜித் அறுவடை செய்வார் என்பது மட்டும் உறுதி. எப்படியாச்சும் தல அஜித் பண்ணிடனும்.

devarmagan-ajith-version

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.