நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள (சலூன்) சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது…

(எம்.எம்.ஜபீர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் பணிப்புரைக்கமைய நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கள் சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்களின் ஊடாக பரவலாம் எனும் அச்சத்தின் காரணமாக பொது மக்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் பிரதேசத்தில் செயற்பட்டு சிகை அலங்கார மற்றும் அழகு படுத்தும் நிலையங்களிற்கு நேரில்  சென்று (22)இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை செயற்பட முடியாதவாறு மூடிவிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியதுடன், சீல்வைக்கும் நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.