கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்!
இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது. இது மிகவும், கடினமான சூழல். ஆனால் இதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும். இதற்கான உண்மையான காரணம் கண்டறிப்படும்’ என தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ தகவல்படி இங்கிலாந்தில் மொத்த மருத்துவ பணியாளர்களில், 44 சதவீதம் பேர் கருப்பின மற்றும் ஆசிய சிறுபான்மையினர்களே உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை