முல்லைத்தீவில் 10 ஏக்கர் வெள்ளியன்று விடுவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பி்தேச செயலகத்தின் முன்பாகவுள்ள 10 ஏக்கர் காணியிலிருந்து  இன்று வெள்ளிக்கிழமை படையினர் முழுமையாக வெளியேறவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட செயலருக்கு படையினர் அறிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதச செயலாளர் அலுவலகம் முன்பாகவுள்ள மக்களுக்குச் சொந்தமான நிலத்தை கடந்த 11 ஆண்டுகளாக படையினர் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலங்களை மீள ஒப்படைக்குமாறுகோரி இதன் உரிமையாளர்கள் நீண்டகாலமாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் குறித்த நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில் இன்று மாவட்ட செயலரிடம் காணி விடுவிக்கப்ப்பட்டு, அதற்கான பத்திரம் ஒப்படைக்கப்படும் என்றும் மாவட்ட செயலகத்துக்கு படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் உயிரிழந்தவேளை அவருடைய வீட்டில் உடலை வைக்க அனுமதி கோரிய போதும் மறுக்கப்பட்ட நிலையில் முகாமின் முன்பாக சடலத்தை வைத்திருந்துவிட்டு பின்னர் எடுத்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.