பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர்.
அடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2.1 சதவீத பாகிஸ்தானியரும், 1.9 சதவீத ஆபிரிக்கர்களும், 0.4 சதவீத சீனர்களும், 0.6 சதவீத பங்களாதேஷினரும், 0.9 சதவீத இதர கருப்பின பின்னணி கொண்டவர்களும், 1.9 சதவீத இதர ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு உயிரிழந்த தேசிய சுகாதார சேவை பணியாளர்கள் எண்ணிக்கை 69 ஆகும். இதிலும், சிறுபான்மை ஊழியர்கள் கணிசமானோர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் சிறுபான்மையினர் மக்கள்தொகை 13 சதவீதம் ஆகும். ஆனால், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் அதையும் தாண்டி 16.2 சதவீதம்பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை