ஆர்.சி.பி. அணியை விட்டு விலகும் எண்ணம் இல்லை: கோஹ்லி- டிவில்லியர்ஸ் பாச போராட்டம்!
ஐ.பி.எல். தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லியும், ஏ.பி.டி வில்லியர்சும் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலின் போதே டி வில்லியர்சும் விராட் கோஹ்லியும் இதனை தெரிவித்தனர்.
இதன்போது விராட் கோஹ்லி கூறுகையில், ‘ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விட்டு விலகுவது குறித்து என்னால் யோசிக்கக் கூட முடியாது. ஐ.பி.எல் தொடரில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் வரை உரிமையாளருக்காக விளையாட விரும்புகிறேன். அணியை விட்டு வெளியேறும் எந்த சூழ்நிலையும் இதுவரை இல்லை’ என கூறினார்.
இதேபோல், டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘நான் நிறைய ஓட்டங்கள் எடுக்க வேண்டும். எனக்கும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விட்டு விலக விருப்பமில்லை. வருங்காலத்தில் இதன்மூலம் கிடைத்த உறவுகளையே எண்ணிப் பார்ப்போம். குறிப்பிட்ட போட்டியை அல்ல. சில அருமையான தருணங்களை எண்ணிக் கொள்வோம். அதை ஒருபோதும் இழக்கமுடியாது’ என கூறினார்.
விராட் கோஹ்லி, ஏ.பி.டி வில்லியர்ஸ், ஆரோன் பின்ஞ், டேல் ஸ்டெயின், மொயின் அலி போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் இதுவரை சம்பியன் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை.
கருத்துக்களேதுமில்லை