சிம்பு ஜீவாவிற்கு நடக்கும் பனிப்போர்.. இந்த சண்டை எப்ப வெடிக்க போகுதோ

கோ படத்தில் பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும் முதலில் தல அஜித்திடம் தயாரிப்பாளர்கள் இந்த கதையை அவரிடம் கூறுங்கள் என்று கேட்டதற்கு அவ்வளவு மாஸ் ஹீரோவுக்கான கதை இது அல்ல என்று கூறியதாக கே.வி.ஆனந்த்.

பின்பு சிம்புவிடம் கதை கூறி கால்ஷீட் வாங்கி உள்ளார். சிம்பு மற்றும் கார்த்திகா இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிடப்பட்டது. சில தினங்களுக்குள் ஷூட்டிங் நடைபெற்றதாகவும் பாடலுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று சிம்புவிடம் கேட்டதற்கு அங்கலாம் இப்ப வர முடியாது என அப்போது மறுத்துவிட்டாராம்.

இதனால் தயாரிப்பாளர்களிடமிருந்து பெரும் பிரச்சனை கிளம்பி உள்ளது. இதனால் அடுத்த ஹீரோவை தேடியுள்ளார் கே.வி.ஆனந்த். அதன்பின் விக்ரமிடம் கதை கூறி உறுதி செய்துள்ளனர் அதுவும் நடைபெறவில்லை.

கடைசியாக ஜீவாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதைக் கூறுவதற்கு நேரம் ஒதுக்கி உள்ளனர். கடைசியில் கேவி ஆனந்த் ஜீவாவை உறுதி செய்து இந்த படத்தை முடித்துள்ளனர்.

ஏற்கனவே ஜீவாவிற்கும் சிம்புவிற்கும் ஏற்கனவே ஏழரை நாட்டு சனி. அதனால்தான் இருவரும் பேசி கொள்ள மாட்டார்கள். பார்த்து கொள்ள மாட்டார்கள். இதனை உறுதி படுத்தும் வகையில் இருக்கும் ஜீவாவின் ஒரு பேட்டி.

டாம் குரூஸ் எப்படி எனக்குப் பழக்கம் இல்லையோ நண்பர் இல்லையோ, அதே மாதிரிதான் சிம்புவும் எனக்கு நண்பர் இல்லை. அதே நேரத்தில் எனக்கு அவரோடு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனோ சிம்புவுடன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு செட் ஆகலை என்று பேட்டிலேயே சொல்லி இருப்பார்.

அதனாலதான் கோ படத்தில் ஜீவா இணைந்தார் என்ற பேச்சி வந்தது. அரசியலை போன்றே சினிமாவிலும் பல அணிகள் உள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.