கலாசார சீரழிவு இடம்பெற்றதாக வெளிமாவட்ட பெண்கள் இருவர் தனிமைப்படுத்தலில்!- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அங்கிருந்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் மனோகரா திரையரங்குக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக் காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்றுவந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டை நேற்று (சனிக்கிழமை) இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் மற்றும் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, அங்கிருந்தவர்கள் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதுடன் இருவரையும் குறித்த வீட்டிலையே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று இவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை