அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 35,000பேர் பாதிப்பு- 2000பேர் உயிரிழப்பு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19)தொற்றுக்கு அமெரிக்காவில் ஒரேநாளில் 2,065பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நேற்று (சனிக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 35,419பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான பாதுகாப்பும் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்து வருகின்றது.
அமெரிக்காவில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 960,651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54,256பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 788,233பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 15,110பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. இதுதவிர 118,162பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை