அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் என்ன சாப்பிடலாம்? என்னலாம் சாப்பிடக் கூடாது…
அடிவயிற்றில் இருக்கும் ஒரு வகை தசை சவ்வு சாக் (Sac) எனப்படும். இவை சிறுநீரகங்களிலிருந்து சிறுநீரைப் பெற்று அதை வெளியேற்றுவதற்காக சேமித்து வைக்கிறது. இதனை தான் சிறுநீரகப்பை என்கிறோம்.சிறுநீரகத்தில் வளரும் திரவம் நிறைந்த இந்த சாக் (sac), பார்ப்பதற்கு பீன் (bean) வடிவத்தில் இருக்கும். அவை உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி சிறுநீரை உருவாக்குகின்றன. நமது உடல் அதிகப்படியான சிறுநீர்ப்பையை கையாள்வது என்பது மிகவும் சவாலான விஷயம் தான்.
சிறுநீர் கழித்தல்
- எப்போதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது அல்லது அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வது போன்ற செயல்கள் அசௌகரியத்தையும் சங்கடத்தையும் நமக்கு ஏற்படுத்தும்.
- சில சமயங்களில் ஏதாவது முக்கியமான மீட்டிங் அல்லது வெளியில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியிலேயே சிறுநீர் முட்டிக் கொண்டு வரும். என்ன செய்வதென்றே தெரியாது.
- எந்தவொரு முன் அறிகுறியும் இல்லாமல், உங்கள் சிறுநீர்ப்பையின் தசைகள் திடீரென சுருங்கும்போது அதிகப்படியான சிறுநீர் உருவாகிறது.
எதனால் இப்படி நடக்கிறது?
- ஒருவேளை, உங்கள் சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரின் அளவு மிக குறைவாக இருந்தாலும் கூட, நீங்கள் கழிவறையை பயன்படுத்தியே தீர வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
- இவ்வாறு கழிவறைக்கு அடிக்கடி செல்ல தூண்டும். இந்த சூழ்நிலை இரவிலும் தொடரலாம்.
- இதனால், உங்கள் தூக்கமும் கூட பாதிக்கப்படலாம்.
- ஆச்சரியப்படும் விதமாக, நீங்கள் உண்ணும் சில உணவுகள் அதிகப்படியான சிறுநீர்ப்பையின் அறிகுறிகளை மேலும் தீவிரமாக்கும், ஏனெனில் இந்த வகை உணவுகள் உங்கள் சிறுநீர்ப்பைக்கு ஏற்றது அல்ல.
- எனவே உங்கள் உடல்நிலையை கையாளும் போது, நீங்கள் நாள் முழுவதும் எதை உண்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு அதிகப்படியான சிறுநீர்ப்பை பிரச்சனையை கையாளுகிறீர்கள் என்றால் 4 சிறந்த மற்றும் 4 மோசமான உணவுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
வாழைப்பழம்
- வாழைப்பழங்களில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உள்ளது. இது உங்கள் சிறுநீர் பாதைக்கு மிகவும் சிறந்தது.
- தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது, எளிதில் உங்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இதனை நீங்கள் ஒரு முழு பழமாகவும் உண்ணலாம் அல்லது வாழைப்பழ சுமூத்தி (smoothie) செய்தும் சாப்பிடலாம்.
நட்ஸ் வகைகள்
- நீங்கள் அதிகப்படியான சிறுநீர்ப்பையின் அறிகுறிகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் உணவில் முந்திரி, பாதாம் மற்றும் வேர்க்கடலை ஆகியவை அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும்.
- இவற்றில் புரதச்சத்து நிறைந்து உள்ளன மற்றும் இவை ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகளும் கூட.
- மேலும், இந்த நட்ஸ் வகைகளில் நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
வெள்ளரிக்காய்
- கோடை காலத்தில் அதிக அளவில் கிடைக்கும் பழங்களில், வெள்ளரியும் ஒன்று. இதற்கான பருவமும் கோடைதான்.
- வெள்ளரிக்காய்யில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் (antioxidants), ஃபைபர் (Fiber) மற்றும் வைட்டமின் கே (Vitamin K) போன்ற சத்துக்கள் உள்ளன.
- அதிகப்படியான சிறுநீர்ப்பை பிரச்சனை உள்ள மக்கள், வெள்ளரி பழம் உண்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
- ஆரோக்கியமான முறையில், உங்கள் சிறுநீர்ப்பையை பாதுகாக்க விரும்பினால்….தினமும், ஒரு பெரிய கிண்ணம் அளவில் வெள்ளரி சாலட்யை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
பருப்பு வகைகள்
- பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், உங்கள் அன்றாட உணவின் ஒரு பகுதியாக இது இருக்க வேண்டும்.
- இவற்றில், பாலிபினால்கள் (polyphenols) போன்ற சேர்மங்களால் நிரம்பியுள்ளன, அவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
காரமான உணவு வகைகள்
- காரமான உணவு வகைகளை நீங்கள் விரும்பி உண்பவரா? ஆம் என்றால். இதனால் உங்கள் சிறுநீர்ப்பை பிரச்சினை மேலும் மோசமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- சூடான மிளகு சாஸ் (sauce) அல்லது காரமான உணவைக் உண்பது, உங்கள் சிறுநீர்ப்பையின் பாதைக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
- இதனால், அதிகப்படியான சிறுநீர்ப்பை பிரச்சனையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
காபி
- காபியில் டையூரிடிக் இருப்பதால் இது சிறுநீர்ப்பைக்கு உகந்தது அல்ல.
- டையூரிடிக் என்பது ஒரு வகை நீர் மாத்திரைகள் ஆகும். இவை உடலில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் உப்பின் அளவை சிறுநீராக அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட மருந்துகள்.
- எனவே சிறுநீர்ப்பை பிரச்சினைகள் இருப்பவர்கள் காஃபின் உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- ஏனெனில், காஃபின் உட்கொள்வதால் உங்கள் சிறுநீரகம் அதிக சிறுநீரை உண்டாக்குகிறது, இதன் விளைவாக உங்கள் சிறுநீர்ப்பை விரைவாக அதிக உணர்திறன் பெறுகிறது.
சிட்ரஸ் பழ வகைகள்
- ஆரஞ்சு, தக்காளி, குருதிநெல்லி போன்ற சிட்ரஸ் பழங்களை முடிந்த அளவு உங்கள் உணவில் இருந்து தவிர்த்து விடுங்கள்.
- சிட்ரஸ் பழங்கள் அதிக அளவு அமிலத்தன்மை (acidic) கொண்டவை மற்றும் இதனால், சிறுநீர் பாதை எரிச்சல் அடைகின்றன.
- அவுரிநெல்லிகள் மற்றும் பேரீச்சம்பழம் போன்றவை குறைந்த அளவு அமிலத்தன்மையை கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை சர்க்கரை (Artificial sugar)
- ஆமாம், செயற்கை சர்க்கரைகள் அதிகப்படியான சிறுநீர்ப்பையின் அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.
- அஸ்பார்டேம் (aspartame), சக்கரின் (saccharin) மற்றும் பிற செயற்கை இனிப்புகளை உட்கொள்ளவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- அஸ்பார்டேம் (aspartame) என்பது ஒரு செயற்கை இனிப்பானாகப் பயன்படுத்தப்படும் மிகவும் இனிமையான பொருள், முக்கியமாக குறைந்த கலோரி தயாரிப்புகளில். இதுவும் ஒன்று.
- சக்கரின் (saccharin) என்பதும் சர்க்கரை தொடர்பான அல்லது சர்க்கரையை கொண்டிருக்கும் பொருள் ஆகும்.
- எந்தவொரு ரெடிமேட் தயாரிப்புகளையும் வாங்குவதற்கு முன் அதன் லேபிள்களைப் அவசியம் படியுங்கள். ஒரு சிலருக்கு தேன் சேர்ப்பது கூட சிறுநீர்ப்பை பிரச்சினையை அதிகப்படுத்தலாம்.
கருத்துக்களேதுமில்லை