இதுக்கு பேர்தான் ரெக்கார்டுக்கே ரெகார்ட் வைக்குறது.. அலப்பறை பண்ணும் அஜித் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு இருக்கும் மாஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. வருகின்ற மே 1ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித்திற்கு அவரது ரசிகர்கள் உலகளவில் சாதனை படைத்து பரிசளித்துள்ளனர்.
எப்போதுமே தல ரசிகர்கள் தல அஜித்தை தலை மேல் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த வாட்டி உலகளவில் வைத்துக் கொண்டாடுவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கையில் இப்போதே அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் தல அஜித்தின் பிறந்த நாளையொட்டி CommonDp வெளியிட்டு அதனை தல ரசிகர்கள் அனைவரும் அவர்களது Dp போட்டோவாக வைத்துக் கொள்வார்கள்.
இந்நிலையில் தல ரசிகர்கள் உலக அளவில் நம்பர் ஒன் Hashtag கிரியேட் செய்து அசத்தியுள்ளனர். #ThalaAJITHBdayGalaCDP இதுதான் அது. அதுமட்டுமில்லாமல் #valimai என்பதையும் உலகளவில் இரண்டாவது இடம் பிடிக்க செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு Hashtagக்கும் 3 மில்லியனை தொட்டதில்லை. முதல் முறையாக செய்து all-time ரெக்கார்ட் சாதனை படைத்துள்ளனர் தல ரசிகர்கள். பிறந்த நாள் வருவதற்கு முன்னாடியே இப்படி என்றால் பிறந்தநாளன்று சொல்லவா வேணும்.
கருத்துக்களேதுமில்லை