ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 6760 ஏக்கர்களில் பயிர் செய்கை

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)

ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில்
6760 ஏக்கர்களில் நெற்செய்கை மற்றும் உப உணவு செய்கைகள்
மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார்
மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விவசாய உற்பத்தி திட்டம் சம்பந்தமாக விவசாய திணைக்களம்
மற்றும் நீர்பாசன எந்திரிகளுடனான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க
அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் திங்கள் கிழமை (27.04.2020) மன்னார்
மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றது.

இதில் விதைக்கப்படும் நெல்லு மற்றும் சிறு தாணிகள் சம்பந்தமாக
கலந்துரையாட்ப்பட்டது.

சிறுபோக செய்கையில் இவ் இரண்டு பயிர் செய்கையானது மன்னார் மாவட்டத்தில்
6760 ஏக்கரில் இவ் பயிர் செய்கை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்

இந்த வகையில் சிறு குளங்கள் நடுத்தர குளங்கள் மற்றும் கட்டுக்கரைக்குளம்
ஆகியவற்றின் கீழ் 4000 ஏக்கர் அளவிலான நெற்செய்கையும் 2606 ஏக்கரில் சிறு
தானிய செய்கையும் மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 520 ஏக்கர்களுக்குரிய நிலத்தில் செய்கைகள் தற்பொழுது
ஆரம்பிக்கப்பட்டு செய்கைகள் நடைபெற்று வருகின்றது எனவும்

இவற்றிற்கான தேவையான உரங்கள் விடயமாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது எனவும் தற்பொழுது மன்னாருக்கு 594 மெற்றிக் தொன்
யூரியா,  143 மெற்றிக் தொன் ரிஎஸ்பி, 150 மெற்றிக் தொன், எம்ஓபி உரம்
தேவைப்படுகின்றது இவ் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது 74 மெற்றிக் தொன் யூரியாவும். தலா 16 மெற்றிக் தொன்
ரிஎஸ்பியும், எம்ஓபியும் கைவசம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டதுடன்

இதைவிட சிறுதானிய செய்கைக்கு விதைகள் கைவசம் காணப்படுகின்றது. இதிலும் 16
ஆயிரம் நிலக்கடலையும் 60 கிலோ பெரிய வெங்காய விதைகளும் தேவையாக
இருக்கின்றது.

இவைகள் கிடைக்கப்பெற்றதும் 19 ஆயிரம் கிலோ நிலக்கடலை செய்கை மன்னாரில்
மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

வீட்டுத் தோட்டங்களை பொறுத்தமட்டில் 5000 விதைகள் ஏற்கனவே பங்கீடு
செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 4000 சிறு பயிர் செய்கை கன்றுகள்
வழங்கப்பட்டுள்ளன. மேலும் 5000 விதைகள் விவசாய விரிவாக்க திணைக்களத்தால்
பகிர்ந்தளிக்கப்பட இருக்கின்றது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.