ஒன்றாரியோ- கியூபெக் மாகாணங்களில் சில கட்டுப்பாடுகளை தளரத்த இந்த வாரம் தீர்மானம்!

கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கி போயுள்ள, ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த வாரம் தங்களது வழக்கமான பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

கனடாவில் மாகாணங்கள் தங்கள் மூடப்பட்டுள்ள பொருளாதாரங்களை மீண்டும் திறக்கத் தொடங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதன் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் முடங்கி போயுள்ள நியூ பிரன்சுவிக்கில், மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரண்டு மாகாணங்கள் தங்களது ஆரம்ப திட்டங்களை இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களின் மீட்பு உத்திகள் குறித்து வெள்ளிக்கிழமை மாகாண முதல்வர்களிடம் கலந்துரையாடினார்.

அத்துடன், கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்படும் ‘நோய் எதிர்ப்பு சக்திச்சான்றிதழ்’ என்று அழைக்கப்படுவது குறித்து விரைவில் பேசுவதாகவும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.