KDPS இனூடாக மல்லிகைத்தீவு, திராய்கேணி தமிழ் மக்களுக்கு E99 பொறியியலாளர்கள் மனித நேயப்பணி…
காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின் (KDPS) உதவியுடன் மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களான 99ஆம் வருட பொறியியலாளர்களின் அனுசரணையில் அம்பாரை மல்லிகைத்தீவைச் சேர்ந்த 94 தமிழ் குடும்பங்களுக்கும், அம்பாரை திராய்கேணியைச் சேர்ந்த 100 தமிழ் குடும்பங்களுக்கும் தலா ரூபா.1000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் KDPS இன் தலைவர் Eng.P.ராஜமோகன் அவர்களின் தலைமையில் கிராம சேவகரின் மூலமாக வழங்கிவைக்கப்பட்டது.
இந்த மனிநேயப்பணியினை மேற்கொள்ள எம்முடன் இணைப்பை ஏற்படுத்திய KDPS இன் ஐக்கிய இராச்சிய இணைப்பாளர் Eng.V.Jegathas அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றியை தெருவித்துக் கொள்வதோடு அத்துடன் இந்த செயற்பாட்டினை மேற்கொள்ள பல வழிகளிலும் உதவியை செய்து கலந்து கொண்ட அனைத்து KDPS உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் KDPS நிர்வாகக் குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
கருத்துக்களேதுமில்லை