சாதாரண ஹிட் இல்ல, மாஸ்டர் மரண ஹிட்டாகும்.. இல்லனா மொத்த துட்டும் நானே தரேன்! தளபதி விஜய்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் நாயகிகளாக மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இளம் நடிகர்களான சாந்தனு, மகேந்திரன் போன்றோரும் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியீடு இந்த நிலையில் தற்போது நிலவி வரும் மோசமான சூழ்நிலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் படத்தை ஆன்-லைனில் வெளியிட போவதாக வதந்திகள் சுற்றி வருகின்றன.
இந்நிலையில் கவலையடைந்த விநியோகஸ்தர்கள் விஜய்யிடம் மாஸ்டர் படத்தை பற்றி முறையிட்டுள்ளனர். ஆனால் விஜய் மாஸ்டர் படம் கண்டிப்பாக செம ஹிட் அடிக்கும். அப்படி ஆகவில்லை என்றால் பணத்தை நானே திருப்பி கொடுக்கிறேன் என அவர்களுக்கு தைரியம் சொல்லி உள்ளார்.
இதனால் விநியோகஸ்தர்கள் தரப்பில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மினிமம் கேரண்டி என்ற முறையில் தான் விஜய்யின் மாஸ்டர் படம் சுமார் 200 கோடி வரை வியாபாரம் ஆனது. ஆனால் கொரானா பாதிப்பால் மீண்டும் மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என ஏகப்பட்ட சந்தேகங்கள் நிலவியுள்ளது.
எப்படியும் மாஸ்டர் படம் அடுத்த தீபாவளிக்கு தான் வரும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. படம் வரும்னு சொல்றது சரி ஆனால் எதில் வரும் தியேட்டரா அல்லது அமேசானா? அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க தலைவரே..
கருத்துக்களேதுமில்லை