சினிமா செய்திகள்நீங்க கொடுக்கறத குடுங்க.. இவனுங்கள நம்ப முடியாது.. அந்த நடிகருக்கு தூது விடும் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் கடந்த 8 வருடத்தில் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்பவர்தான் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் குடும்ப ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வண்ணம் உள்ளன.
இருந்தாலும் சமீப காலமாக இவரின் படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. மிஸ்டர் லோக்கல், ஹீரோ என தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஹீரோ படம் பல பஞ்சாயத்துகளை சந்தித்து சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மனக்கஷ்டத்தை கொடுத்துள்ளது.
இதனால் திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். இனி தமிழ் சினிமாவை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது என அண்டை மாநிலங்களிலும் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த அவ்வப்போது பெரிய நடிகர்களின் படங்களில் விஜயம் செய்ய இருக்கிறாராம்.
இவரின் இந்த முரட்டுத்தனமான பிளான் கண்டு அதிர்ச்சியில் உள்ளதாம் தமிழ் சினிமா. அதுமட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் உள்ள பெரிய ஹீரோக்களின் படங்களில் சம்பளத்தில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளதாம்.
சொல்லப்போனால் கொடுக்கறதை கொடுங்க நான் என்ன வேணாலும் நடிக்கிறேன் என கேட்டு கமிட் செய்து கொள்கிறாராம். சிவகார்த்திகேயன் தனது தெலுங்கு மார்க்கெட்டை பலப்படுத்த பிரபல நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளாராம். தமிழில் அவ்வப்போது படங்கள் சறுக்குவதால் தெலுங்கிலும் நேரடி படங்கள் பண்ணுவதற்கு ரெடியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் குறித்து உண்மையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில். பாகுபலி படங்களுக்குப்பிறகு தெலுங்கு சினிமா இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் தந்திரமாக பிளான் போட்டு களமிறங்குகிறார் சிவகார்த்திகேயன்.
கருத்துக்களேதுமில்லை