பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்தால் சில குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல்!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி சில குழந்தைகள் பிரித்தானியாவில் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த குழந்தைகள் அரிய அழற்சி நோய்க்குறியால் இறந்துள்ளதாகவும் இது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் தொடர்புடையதாக காணப்படுவதாகவும் சுகாதார செயலாளர் மற் ஹன்ஹொக் (Matt Hancock) கூறியுள்ளார்.
எனினும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் சிகிச்சை முறைமை என்பவற்றில் குழப்பநிலை உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகள் 5 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், இவ்வாறு அதிக காய்ச்சல் மற்றும் வீக்கங்களுடன் மருத்துவமனைக்குவரும் குழந்தைகளிடத்தில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கும் கடுமையான அழற்சி நோயிற்கும் இடையிலான தொடர்பு குறித்து இத்தாலிய மற்றும் பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
இந்த நோயால் எத்தனை பிரித்தானியக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூற அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை