பிரித்தானியாவில் ஒரேநாளில் 586பேர் உயிரிழப்பு- 3,996பேர் பாதிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஒரேநாளில் 586பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்ட 329 கொரோனா வைரஸ் இறப்புகளை விட இன்று உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று நிலவரப்படி, 3996பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பிரித்தானியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 161,145ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,678ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர 139,123பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,559பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வார இறுதியில் தொடர்ந்து புள்ளிவிபரங்கள் வீழ்ச்சியடையும் என்று அறியப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளாத வகையில் தினசரி புள்ளிவிபரங்கள் வெளியாகின்றன.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி பிரித்தானியாவின் கொடிய நாளாக அறியப்படுகின்றது. அன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகபட்சமான 980பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை