அமேசான் மூலம் 300 கோடிக்கு திட்டம் போட்ட கமல்.. கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்தான்

சமீபகாலமாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் வாழ்க்கையை படமாக்கியுள்ளனர்.

ரன்பீர் கபூர், தமிழ் நடிகர் ஜீவா ஆகியோர் நடித்த 83 என்ற படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியது. கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, Phantom Films, ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஏப்ரல் 10-ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் கொரானா பிரச்சனையால் படத்தின் வெளியீடு தள்ளிக் சென்றது. மேலும் 83 படத்தின் தமிழ் பதிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் வெளியிட இருந்தார்.

மேலும் ஜீவா இந்த படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வெளியீட்டில் தடை ஏற்பட்டுள்ளதால் 83 படத்தை OTTயில் அதாவது ஆன்லைனில் படத்தை வெளியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் படத்தின் இயக்குனர் கபீர் கான் கண்டிப்பாக இந்த படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம். மேலும் 83 படம் குறித்த தேதியில் ரிலீஸாகியிருந்தால் இந்நேரம் 300 கோடி வரை வசூல் ஆகியிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.