உல்லாசம் படத்தில் அஜித்துடன் நடித்த மகேஸ்வரியா இது.. கல்யாணம் ஆனாலே இப்படிதான் போல
நடிகை மகேஷ்வரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் விக்ரம், தல அஜித்துடன் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனால் அதற்கு முன்னரே இவர் கருத்தம்மா படத்தில் நடித்திருப்பார். 2000 வருடத்திற்கு பின்பு எந்தப் படமும் ஓடவில்லை என்பதால் சீரியலில் இறங்கிவிட்டார். இவர் படித்தது என்னவோ பேஷன் டிசைனிங் ஆனால் அதில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்தினார். பின்பு இந்திய அளவில் புகழ்பெற்ற ஸ்ரீதேவியின் காஸ்ட்யூம் டிசைனராக வேலை பார்த்தார். மகேஸ்வரிக்கு ஸ்ரீதேவி அத்தை உறவு என்பது நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்.
தனக்கு எது வருமோ என்பதை நோக்கி காயை நகர்த்தி மிகத் திறமையாக செயல்பட்டார் மகேஸ்வரி. இதற்கு ஊன்றுகோலாக இருந்தது ஸ்ரீதேவி தான் என்பதை ஒரு பேட்டியில் தெளிவுபடுத்துகிறார்.
பேஷன் டிசைனிங் மூலம் பல சாதனைகள் புரிவதற்கு எனது முதுகெலும்பாக இருப்பது ஸ்ரீதேவி அத்தை மட்டும் தான். கண்டிப்பாக அவரின் கனவை நினைவாக்க வேண்டும் என்று தெரிவித்து இருப்பார். கடைசியாக பத்மஸ்ரீ விருது வாங்கும் விழாவிற்கு ஸ்ரீதேவி அணிந்திருந்த உடையை மகேஸ்வரி தான் தயார் செய்தாராம்.
தற்போது மகேஸ்வரி எப்படி உள்ளார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு வந்திருக்கும், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கருத்துக்களேதுமில்லை